Published Date: July 24, 2023
CATEGORY: CONSTITUENCY

உலகளாவிய முன்னணி நிறுவனமான NICL தமிழ்நாடு பிரிட்ஜ் சங்கத்துடன் இணைந்து மூன்று நாள் HCL தமிழ்நாடு ஸ்டேட் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டியை மதுரையில் தொடங்கியது.தொடக்க விழாவில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்தியாவில் இருந்து 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 40 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியாளர்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பரிசு தொகை வழங்கப்படுகிறது.
சுந்தர் மகாலிங்கம் எச்.சி.எல் கார்ப்பரேஷனின் ஸ்டேட்டர்ஜி தலைவர் கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளாக எச்.சி.எல். பிரிட்ஜ் ஆர்வலர்களுக்கு மற்றும் சமூகத்திற்கு ஒரு செழிப்பான தளத்தை வழங்கி வருகிறது. கடந்த காலங்களில் நாங்கள் சர்வதேச போட்டிகளை தொடர்ந்து நடத்தி இருந்தாலும் மாநில அளவிலான சேம்பியன்ஷிப்பை நடத்துவது இதுவே முதல் முறை. அற்புதமான மைல்கல், மாநில அளவில் பிரிட்ஜ் விளையாட்டை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் திறமைகளை வெளிக்கொண்டு பிரம்மாண்ட மேடையாகவும் மற்றும் பிரகாசமான வாய்ப்பை வழங்குவது எங்கள் நிறுவனத்தின் நோக்கம். இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பிரிட்ஜ் ஆர்வலர்களுக்கு டீம் மற்றும் ஜோடியாகவும் விளையாட இரண்டு பிரிவுகளிலும் வாய்ப்புகள் வழங்கப்படும். இது அனைத்து வகை வீரர்களுக்கும் அறிவுசார் அனுபவத்தை கண்டிப்பாக கொடுக்கும் என நம்புகின்றோம் என்றார்.
போட்டிகளில் அமெரிக்கா, போலந்து, இத்தாலி, பல்கேரியா, ரஷ்யா, நெதர்லாந்து, இஸ்ரேல், சுவீடன், ஐஸ்லாந்து,தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ,குரேஷியா, டென்மார்க், ருமேனியா, ஜப்பான், தாய்லாந்து, ஜோர்டன், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து 185 அணிகளைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 20 வது HCL இன்டர்நேஷனல் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் 2023 அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை டெல்லி NCR இல் நடைபெறும் .
Media: Maalai Murasu